Wednesday, August 4, 2010

பாவ மன்னிப்பு தேடுவதில் தலையாய துவா!‎

கீழ்காணும் துவாவை ஒருவர் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவர் சொர்க்கவாசியாவார்.

இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவரும் சொர்க்கவாசியாவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். புகாரி. 6309

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لا إِلَهَ إِلا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَمَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَاصَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ

அல்லாஹும்ம அன்த ரப்பி லா இலாஹா இல்லாஹ் அன்த ஹலக்தனி ‎

வ அனா அப்துக்க வ அனா அலா அஹ்திக ‎

வவஹ்திக மஸ்ததஹ்து ‎

அஹூது பிக மின் ஷர்ரி மா சனஹ்து ‎

அபூஹு லக பிநிஹ்மதிக்க ‎

அலைய்ய வஅபூஹு லக பிதம்பி பஹ்பிர்லி

Fபஇன்னஹு லாயஹ்Fபிருத் துனூப இல்லாஹ் அன்த.‎

பொருள்

இறைவா நீயே எஜமான். ‎

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. ‎

என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. ‎

உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். ‎

நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். ‎

நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். ‎

எனவே என்னை மன்னிப்பாயாக. உன்னைத் தவிர யாரும் பாவங்களை ‎மன்னிக்க முடியாது.‎

மௌலவி பி.ஜைனுலாபிதீன் அவர்கள் எழுதிய துஆக்களின் தொகுப்பு என்ற நூலிலிருந்து.

1 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த ஹதீஸ் புகாரி 6306 யில் இடம் பெற்று இருக்கிறது .

6309 யில் கீழ் கொண்ட ஹதீஸ் இடம் பெற்றுயிருக்கிறது.
6309. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.5
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Post a Comment