- இஸ்லாத்தின் பெயரால் சடங்குகள்!
- ஏகத்துவவாதிகளும் இணைவைப்பவர்களும்?
- ஏகத்துவவாதிகளும் இணைவைப்பவர்களும்?
- இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்?
- முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்!
ஏதோ மனிதனாக பிறந்து விட்டோம்; உயிர் உள்ளவரை வாழ்ந்தே ஆகவேண்டும்; அதற்காக பொருளீட்ட வேண்டும்; மணமுடிக்க வேண்டும். இவ்விரண்டுக்கும் சமுதாயத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் சிந்திக்காமல் மார்க்கம் கட்டளையிடாத மூதாதையர்கள், ஹஜ்ரத்மார்களின் சொல்லாகிய மெளலூது, மீலாது பாத்திஹாக்களை மார்க்கமாக கொள்கின்றனர்.
இம்மாதிரி சிந்திக்காமல் செயல்படும் சகோதர்களைப் பார்த்து நீ மார்க்கப்படி நடக்காமல் மூடத்தனமாக செயல்படுகின்றாயே! அல்லாஹ்வின் கட்டளையையும் நபி அவர்களின் போதனைகளையும் கவனித்தாயா? என்று கேட்டால், அதற்குத்தான் ஹஜ்ரத் இருக்கின்றாரே அவர் சொல்லாததை நீ ஏன் சொல்கின்றாய்? என்று நம்மைப் பார்த்து கேட்கின்றனர். நபிவழி அதுவே நல்வழி என்று வாயளவில் கூறுகின்றவர்கள் போர்டு எழுதி பள்ளிவாசலில் தொங்க விடுபவர்கள் 'எது நபிவழி' என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. பெயருக்கு முஸ்லிம்களாக இருப்பவர்கள் வாயிலிருந்து வருகின்றவைகள் சிந்தனையுடன் கூடியவை அல்ல. 'ஷரீஅத்' நமது உயிர் 'ஷரீஅத்படி நடப்போம்' என்று கோஷம் போடுபவர்கள் 'ஷரீஅத்' என்பது எது? இறைக் கட்டளைகள் என்ன சொல்கின்றது? நபி அவர்கள் கூறுவது யாது? என்பதை கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
நபி அவர்கள் எப்படி வாழ்ந்து காட்டினார்களோ, அதுதான் நமக்கு முன்மாதிரி! மனித வாழ்க்கையில் நிகழக்கூடிய எந்த ஒரு சிறு செயலுக்கும் முன்மாதிரி இல்லாமல் இல்லை. உங்களுக்கு பிரியமானவர்கள் நடந்து காட்டுவது நபிவழி அன்று! மாறாக உண்மையான நம்பகமான நபிவழிகளை, நபிகளார் தம்வாழ்வு வாக்குகளிலிருந்து நீங்கள் அறிந்து நடப்பதுதான் மார்க்கத்தை புரிந்து செயல்படுவதாகும்.
அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கக் கூடிய பகுத்தறிவைப் பயன்படுத்தி மூட நம்பிக்கைகளை விட்டு விலகி எது உண்மையான நபிவழி என்பதை விளங்கி, செயல்பட்டு இம்மையிலும் மறுமையிலும் வல்ல அல்லாஹ்வின் பேரருளைப் பெற்று வாழ்வோமாக! ஆமீன்.
0 comments:
Post a Comment