Wednesday, July 21, 2010

அல்-குர்ஆன் மனிதவார்த்தைகள் அல்ல!

திருமறைக் குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை ‎‎(Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும்.‎

இறை மறுப்பு போலி என்பதற்கு, இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கு, நேற்று வரை ‎இறைமறுப்புக் கொள்கையில் பெரியார்தாசனாய் இருந்து இன்று இறைநேசனாக ‎‎(முஸ்லிமாக) மாறிக் கொண்ட சகோ: அப்துல்லாஹ் அவர்கள் ஒரு ‎எடுத்துக்காட்டாகும்.‎

இதற்கு முன்னர் பல மத வேத கிரங்தங்களை பார்வையிட்டவர் இறுதியாகவே திருக்குர்ஆனை ‎ஆய்வு செய்து இதையே கடவுள் வார்த்தையாக உணருகிறேன் என்றும் 14 ‎நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை அது மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் ‎இருப்பது இது கடவுள் வார்த்தைகள் தான் எனும் எனது நம்;பிக்கையை இன்னும் ‎வலுப்படுத்துகிறது என்றுக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ரியாத்தின் பிரபல ‎அரப்டைம்ஸ் நாளேட்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் பெரியவன், அல்லாஹ்விற்கே ‎புகழ் அனைத்தும்.‎ http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுபோன்றே நீரோட்டம் அடியார் அவர்கள் அவருடைய சிறை வாழ்க்கையில் அனைத்து ‎மதவேத கிரந்தங்களையும் படித்து விட்டு இறுதியாகவே திருக்குர்ஆனையும், அதன் ‎மெஸேஞ்சர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றையும் படித்துவிட்டு ‎இஸ்லாத்தை ஏற்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜியாவுல் ஹக் அவர்களின் ‎ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற அவர் எழுதிய இஸ்லாம் என் காதல் எனும் நூல் ‎வெளியீட்டு விழாவில் கூறினார்.‎

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் தந்தையாருடன் திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து ஆய்வு ‎செய்து கொண்டிருக்கையில் திருக்குர்ஆனையும் படித்தால் என்ன ? என்ற சிந்தனை மேலிட ‎திருக்குர்ஆனைப் படித்து விட்டு சுஜாதா அவர்கள் கூறிய வாசகங்கள் திருமறைக்குர்ஆன் ‎மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ‎ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும் என்றுக் கூறினார். திணமனி ரம்ஜான் மலர் 2003.‎

உலகின் 100 தலைவர்களின் சாதனைகளை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள் திருமறைக் ‎குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், படித்து ஆய்வு செய்தப் ‎பின்னர் ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் வெற்றி அடைந்தவர் முஹம்மதைத் தவிர உலகில்; ‎வேறு எவருரையும் நான் கண்டதில்லை என்றும், 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை ‎திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாறும் சிறுதும் ‎மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் ‎கூறி அண்ணலார் அவர்களை சாதனையாளர்களில் வரிசையில் முதலில் இடம் பெறச் ‎செய்ததற்கு இதுவே காரணம் என்றும் அவருடைய வாசகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் ‎குறிப்பிட்டிருந்தார். மைக்கேல் ஹார்ட் த ஹண்ட்ரட் நியூயார்க் ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி 1978 ‎பக்கம் 33.‎

‎4:82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து ‎வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.‎

திருமறைக குர்ஆனை கவனமாகப் படித்து ஆய்வு செய்தவர்கள் திருமறைக்குர்ஆனை இது ‎கடவுள் வார்த்தைகள் அல்லாமல் மனித வார்த்தைகள் அல்ல என்றே இதுவரைக் கூறி ‎வந்துள்ளனர். இன்று சிலர் திருமறைக்குர்ஆனைப் படிக்காமல், அதை ஆய்வு செய்யாமல் ‎அவர்களின் தலைவர்கள், மதபோதகர்கள் மேடையில் முழங்குகின்ற, அவர்களின் ‎பத்திரிகைகளில் எழுதுகின்றவைகளைப் படித்தும், கேட்டும் திருமறைக் குர்ஆனிpன் மீது ‎தவறான அபிப்பிராயம்; கொள்கின்றனர், விமர்சிக்கின்றனர் என்பதற்கு திராவிடர் கழகத்தினருடன் ‎‎( டாக்டர் எழிலன் உட்பட ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய விவாதம் ‎ஒருப்பெரிய எடுத்துக்காட்டாகும்.‎ As received.

0 comments:

Post a Comment