Tuesday, July 20, 2010

நபி (ஸல்) அவர்கள்!

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி அறிய பயனுள்ள வலைத்தளங்கள்.
  1. மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - Thowheed Mulakkam!
  2. மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - Online PJ
  3. Prophet The Man Supreme
  4. முகம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு 
  5. முத்திரை பதித்த முஹம்மது நபி(ஸல்) அவர்கள்!  
இன்றைய முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய வழிகாட்டும் தலைவரை விட்டுவிட்டு யாய் யாரையோ வழிகாட்டும் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலை தமிழகம் மட்டுமல்ல அகில உலகிலும் உள்ளது என்பதுதான் உண்மை. தங்கள் உண்மையான தலைவரை பற்றிய அறிமுகமே முறைப்படி இல்லாது போனதால் தான் தங்களின் தலைவரை பற்றி விதவிதமான கற்பனைகளை செய்து கொண்டுள்ளனர்.

தலைவர்களை பற்றிய அறிமுகம் இருப்பவர்களிடையே கூட அவர்கள் பற்றிய முறையான அறிமுகம் இல்லை என்று கூறலாம். முஸ்லிம்களின் பலரின் நிலைமை இதுதான். எனவே தங்கள் தலைவரைப் பற்றி முஸ்லிம்கள் என்ன புரிந்து வைத்துள்ளனர் என்பதை அறியும் முன் அந்த தலைவர் யார் என்பதையும் விளங்க வேண்டும்.

சுமார் ஆண்டுகளுக்கு முன் மக்கா நகரத்தில் சாதரணமான தம்பதிக்கு பிறந்தவர்.பிறக்கும் முன்பே தந்தையையும் பிறந்த பின்பு சில வருடங்களில் தாயையும் இழந்து பெரிய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். சிறு வயதில் ஆடு மேய்ப்பாளராகவும் வாலிப வயதில் பெரும் வணிகராகவும் திகழ்ந்தார்.

ஒழுக்கக் கேட்டின் அச்சாணியாக அமைந்திருந்த அவர் பிறந்த பகுதியில் நபி (ஸல்) அவர்கள் ஒழுக்கமுள்ள இளைஞராகவும் திகழ்ந்தார்.மோசடி செய்யும் வியாபாரிகளுக்கு மத்தியில் நாணை யமிக்க வியாபாரியாக திகழ்ந்தார். இவரின் வாழ்கையை எந்த நிலையிலிருந்து ஆராய்ந் தாலும் கடுகளவு குறையைக் கூட காண முடியாது. அந்த அளவுக்கு தூய்மை.

ஆம்! ஒழுக்கம், நேர்மை, நாணயம், அன்பு, பொறுமை, வீரம், அறிவு என எல்லா சிறந்த பண்புகளையும் தனது வாழ்விலே நடைமுறைப்படுத்திக் காட்டியவர். இஸ்லாத்தை விமர்சிக்கும் எதிரிகள் கூட இவரை மாமனிதர் என்று போற்ற தவறுவதில்லை.

மக்கள் நேர்வழி அடையவேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும் தாங்கிக்கொண்டார்கள். நமது தாய் தந்தை மற்றும் அனைவைரையும் விட அவர்கள் மீது அன்பு வைப்பது நம்மீது கடமையாகும். நம்மில் சிலர் ஸலவாத் என்றாலே நபிகள் நாயகத்திடம் நான் எதனையோ கேட்கிறோம் என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல. மாறாக நபி(ஸல்) அவரகளுக்காக நாம் துஆச் செய்கிறோம்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும், முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காக பாடுபட்டதற்காகவும் அவர்களிம் மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினான் என்பதற்காகவும் நாம் அவர்களை நன்றியோடு நினைத்து அவர்களுக்காக துவாச்செய்கிறோம்.

யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்கு பத்து மடங்கு அருள் புரிகிறான். என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: திர்மிதீ

என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூத்

இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்கள்மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும் என்பதை இந்த ஹதீஸ்மூலம் நாம் உணரலாம்.நபி(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழிகாட்டுதலை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ்வால் தரப்பட்ட பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கூடுதல் குறைவின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள்.

0 comments:

Post a Comment