Wednesday, December 15, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!



தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு ‎பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலரால் தனியாக பிரிந்து 16-05-‎‎2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ‎ஆரம்பத்தில் தமுமுக அரசியல் கட்சியாக செயல்படுகிறது அது ஏகத்துவப் ‎பிரச்சாரத்திற்கு தடங்கலாக உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன் பிரிந்து வந்து இந்த ‎அமைப்பை உருவாக்கியது. ஆனால் பின்னர் தங்களுக்கென்று பச்சை வெள்ளை கருப்பு ‎கொடியுடன் அரசியல் சார்ந்த விவகாரங்களிலும் தலையிட்டு செயல்பட்டு வருகிறது.

நஜ்ஜாத் ‎அல்லது ஏகத்துவவாதிகள் என்று அழைக்கக்கூடியவர்களை மட்டுமே உறுப்பினர்களாக ‎கொண்டு தஃவா எனும் ஒரிறை அழைப்புப் பணியை செய்து வருகிறது.‎பின்னர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் இந்த அமைப்பிருந்து நீக்கப்பட்டு 16-01-2009 ‎அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்என்கிற பெயரில் புதிய அமைப்பு துவங்கியுள்ளனர்.‎

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு அரபு நாடுகளில் தமிழ் முஸ்லிம்களை நிர்வாகிகளாக கொண்டு கிளைகள் ‎அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமதான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய ‎தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய ‎நிதியுதவிகளை செய்து வருகின்றன.‎

தமிழகத்தில் இரத்தானம் செய்வதில் இரண்டு முறை முதல் இடம் பிடித்த முஸ்லிம் சமுதாய ‎இயக்கம்!

அமைப்பின் கொள்கைள்

‎1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் ‎வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று ‎செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.‎

‎2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே ‎போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.‎

‎3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ‎ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் ‎புறக்கணிக்கப்படும்.‎

‎4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ‎சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் ‎கருத்து கூறப்படும்

அமைப்பின் நோக்கங்கள்

‎1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் ‎தூண்டுவது.‎

‎2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.‎

‎3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், ‎கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு ‎அடையப்பாடுபடுதல்.‎

கல்வி சேவை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாணவர் அணி தமிழகம் முழுக்க கல்வி சேவையை ‎செய்துவருகின்றது. ‎தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் ‎முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அயராது ‎உழைத்து கொண்டிருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ், தமிழக்த்தில் எந்த முஸ்லீம் ‎அமைப்புகளும், கல்வி அறகட்டளைகளும் செய்திராத கல்வி சேவைகளை தமிழகத்தின் ‎அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 255 கல்வி சேவை நிகழ்சிகளை தமிழகத்தில் 154 ‎இடங்களில் நடத்தி சாதனை புரிந்துள்ளது. TNTJ மாணவர் அணி செய்துவரும் பல்வேறு ‎பணிகள்

கல்வி வளர்சி பணிகள்

‎1. கல்வி கற்பதும் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாங்குவதும் எளிதானதே, இதை ‎மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கும் விதமாக அல்லாஹ்வுடைய மிகப்பெரிய ‎கிருபையால் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றோம், ‎மிக குறுகிய காலத்தில் தமிழகத்தில் 154 இடங்களில் 255 மேற்பட்ட கல்வி கருத்தரங்குகளை ‎நடத்தி உள்ளோம், தமிழ முஸ்லீம்களுக்காக மட்டும் அல்லாமல் கர்நாடகா மாநிலத்திலும் ‎கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.‎

‎2. மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்காலாம் ? என்று ‎அனைத்து சமுதாய மாணவ மாணவியரும் பயன்படும் வகையில் சிறந்த கல்வியாளர்களை ‎கொண்டு கல்வி கருத்தரங்கங்களை நடத்தி வருகின்றோம்.‎

‎3 . ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் கல்வி வழிகாட்ட கண்காட்சிகளை நடத்தில் ‎அதில் ஒவ்வொறு படிப்பிற்க்கும் தனி பிரிவுகள் அமைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி ‎வழிகாட்டுகின்றோம்.‎

‎4. நல்ல கல்லூரியில் சேர அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும், அதற்க்காக தேர்வுக்கு ‎முன்னர் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சியை நடத்தி தேர்வு எழுதும் ‎நுணுக்கங்களை மாணவ மாணவியருக்கு கற்று கொடுக்கின்றோம்.‎

‎5. வேலை வாய்ப்பு பெற ஆங்கில மொழித்திறமை அவசியம், அதற்க்காக ஆங்கில பயிற்சி ‎வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகின்றோம்.‎

‎6. ஏழை மாணவர்களுக்கும் கணினி அறிவை மேம்படுத்த இலவசமாக கம்ப்யூட்டர் சாப்ட் வேர் ‎ஹார்ட்வேர் வகுப்புகள் நடத்தி வருகின்றோம்.‎

‎7. கல்வியின் அவசியத்தை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரங்களிலும், பொது ‎கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.‎

‎8. சமுதாய மாணவர்கள் வேலை வாய்ப்பு தகவல் அறிந்து கொள்ள உள்நாடு வெளிநாட்டில் ‎வேலை உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை திரட்டி அனைவருக்கும் e-mail ‎மூலமாக தெரிவிக்கின்றோம். (நீங்களும் வேலை வாய்ப்பு தகவல் பெற tntjjob@gmail.com என்ற e-‎mail முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்).‎

‎9. வேலைவாய்ப்பு பெற நடைபெறும் நேர்முக தேர்வில் எவ்வாறு பதில் என்று மாணவர்களுக்கு ‎‎" நேர்முக தேர்வு பயிற்சி முகாம்" நடத்திவருகின்றோம்.‎

‎10. உயர் கல்வி நிறுவனக்கள் உயர்சாதியினருக்கே என்ற நிலைமையை மாற்றி IIT, IIM, IISc, NIT, ‎AIMS போன்ற உயர் கல்வி நிறுவங்கள் நடத்தும் நுழைவு தேர்வு பற்றிய தகவல்களை திரட்டி ‎முஸ்லீம்களும் உயர் கல்வி நிறுவங்களில் படிப்பதற்க்கான ஊக்கமும், வழிகாட்டுதலும், ‎பயிற்சியும் இலவசமாக அளித்து வருகின்றோம்.‎

‎11. குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்க வேண்டும், மாணவ மாணவியரின் கல்வி ‎மேன்பாட்டில் பெற்றோர்களின் பெரும் பங்கை விளக்கி பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் ‎முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.‎

‎12. மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவி தொகையை முஸ்லீம் மாணவ ‎மாணவியருக்கு பெற்று கொடுக்கும் வகையில் அரசிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ‎பூர்த்தி செய்து கொடுக்கும் முகாம்களை நடத்தி வருகின்றோம்.‎

‎13. ஏழை மாணவ மாணவியருக்கு உதவும் வண்ணமாக இலவச நோட்டு புத்தகமும், எங்களால் ‎இயன்ற கல்வி உதவியும் செய்து வருகின்றோம்

சமுதாய பணிகள்

‎1. முஸ்லீம்களுக்கு எதிரான பத்திரிக்கைதுறை பயங்கரவாதத்தை தடுக்க நமது சமுதாய ‎மாணவர்களும் பத்திரிக்கை துறையில் நுழைந்து சாதனை புறிய முஸ்லீம் மாணவர்க்ளுக்கு ‎பத்திரிக்கை துறை சம்மத்தமாக பயிற்சி அளித்து வருகின்றோம்.‎

‎2. சமுதாய இளைஞர்களிடையே உள்ள வரதட்சணை மோகத்திற்க்கு எதிராக இளைஞர்களிடம் ‎வரதட்சணையால் ஏற்படும் தீமைகளை விளக்கி வரதட்சணைக்கு எதிராக கடுமையான ‎பிரச்சாரம் செய்து வருகின்றோம்

‎3. இளைஞர்கள் மது, சிகெரெட் போன்ற போதை பழக்கத்திற்க்கு அடிமையாகமல் தடுக்க ‎மாணவர்களிடம் மது சிகெரெட் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய்மைகளை விளக்கி ‎போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றோம்.‎

‎4. நமது சமுதாய மாணவியர்களை காதல் என்ற போர்வையில் காவி கயவர்களிடம் சிக்காமல் ‎தடுக்க மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இதை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ‎செய்து வருகின்றோம். காதல் என்ற பெயரில் நடக்கும் சமூக சீர்கேட்டிற்க்கு எதிராகவும் காதலர் ‎தினத்தில் நடக்கும் அனாச்சாரங்களுக்கு எதிராகவும், காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம் ‎செய்கின்றோம்.‎

இஸ்லாமிய பணிகள்

‎1. முஸ்லீம்களின் இளைய சமுதாயம் ஷிர்க் பித்-அத் கொள்கையில் வீழ்ந்துவிடாமல் தடுக்க ‎மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ பிரசாரங்களை மேற்கொண்டுள்ளோம், ‎தனி நபர் தாவா மூலமும், துண்டு பிரசூரங்கள் மூலமும் ஏகத்துவ அழைப்பு பணியை ‎இளைஞர்கள் மத்தியில் முடுக்கிவிட்டுள்ளோம்.‎

‎2. மாணவர்கள் இஸ்லாத்தை முழுவதும்மாக அறிந்த்து கொள்ள ஒழுக்க பயிற்ச்சி முகாம் ‎‎(தர்பியா) நடத்தி வருகின்றோம்.‎

‎3. மாற்று மத மாணவர்களின் இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை போக்கி இஸ்லாத்தின் பால் ‎அவர்களை அழைக்கும் வண்ணம் "மாற்று மத மாணவர்களுக்கான கேள்வி-பதில்" ‎நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்

‎4. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களை கொண்டு முஸ்லீம் மாணவர்களுக்கான கேள்வி-பதில் ‎நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றோம்.‎

‎5. கல்லூரிகளில் ஜும்மா பயான் நிகழ்த்துவது, மாணவர் விடுதிகளில் (Hostels) இஸ்லாமிய ‎பயான்கள் நிகழ்த்துவது போன்ற தாவா பணிகளை செய்து வருகின்றோம்.‎

‎6 . SMS மூலம் கல்வி செய்திகள் குர் ஆன் ஹதீஸ்கள் பரப்பி வருகின்றோம்

இணையதள பணிகள் ‎

இணையதளத்தில் கல்வி வளர்ச்சி பணிகளையும் இஸ்லாமிய பணிகளையும் ஆற்ற ‎www.tntjsw.blogspot.com என்ற இணையத்தை (வலை பூ) நிறுவி உள்ளோம். இதில் கல்வி பற்றிய ‎தகவல்கள், குர் ஆன் ஹதீஸ்களையும் தொகுத்து வழங்கி உள்ளோம்.‎

அமைப்பின் செயல் திட்டங்கள்

‎‎1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.‎

‎2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் ‎வெளியிடுதல்.‎

‎3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.‎

‎4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், ‎கருத்தரங்குகள் நடத்துதல்.‎

‎5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், ‎சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட ‎அனைத்தையும் பயன்படுத்துதல்.‎

‎6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.‎

‎7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.‎

‎8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், ‎அமைப்புகள் ஏற்படுத்தல்.‎

‎9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் ‎முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், ‎உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் ‎தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் ‎பாடுபடுவது.‎

‎10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, ‎போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ‎பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் ‎நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் ‎மேற்கொள்வது.‎

‎11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் ‎இவற்றுக்கெதிராகவும் போராடுவது.‎

‎12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து ‎வகையான உதவிகளையும் மேற்கொள்வது.‎

‎13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.‎

‎14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு ‎அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் ‎சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.‎

‎15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, ‎பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக ‎எதிர்ப்பது.‎

‎16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ‎ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.‎

ஆதாரம்: விக்கிபீடியா‎

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ இணையதளம் TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்புடைய தலைப்புகள்

ஏகத்துவ எழுச்சி

அன்பான அழைப்பு

0 comments:

Post a Comment