Thursday, December 16, 2010

நபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்!

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)

(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: நஸயீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரீ இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

மேலும் இந்த கட்டுரையை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும். TNTJ.

1 comments:

Anonymous said...

assalmau alaikum, இதன் தொடர்ச்சி எங்கே? எங்குமே கிடைக்க வில்லை..இப்படி பதில் முடிப்பது சரி இல்லை.tntj sitelm தொடரும் என்று முடித்து விட்டார்கள்.

Post a Comment